எண்ண வரண்ணங்கள்
சமணம் மனிதனின் மனதில் தோன்றும் எண்ணங்களை கொண்டு, வெண்மை,
கருமை என்று இரண்டு வகையாகப் பிரிக்கிறது. எண்ணத்தின்
தன்மைக்கேற்றவாறு அவற்றை மேலும் விரித்து ஆறு வகைகளாகப் பிரிக்கும்.
1. கிருட்டினலேசியை – அடர்ந்த கருமை (Dark Black)
2. நீலலேசியை – நீலம் கலந்த கருமை (Black)
3. கபோதலேசியை – வெண்மை கலந்த கருமை (Grey)
4. பீதலேசியை – மஞ்சள் கலந்த வெண்மை (Pale yellow)
5. பத்மலேசியை – மங்கலான வெண்மை (Pale white)
6. சுக்லலேசியை – தூய வெண்மை (Pure White)
முதல் மூன்றும் கருமை எண்ணங்களாகும், மற்ற மூன்றும் வெண்மை
எண்ணங்களாகும்.
1. மிகுந்த கருமை – சதா சச்சரவு செய்யும் தன்மை, கடின மனயில்பு,
பழிவாங்கும் உணர்ச்சி, பெரியவர்கள் பேச்சை ஏற்காமை.
2. கருமை – சோம்பல், அறிவின்மை, சுகங்களில் அதிக நாட்டம்.
3. வெண்மை கலந்த கருமை – எதற்கெடுதாலும் அவசரப்படுதல்,
பயப்படுதல், மன உறுதியின்மை, காரணமேயின்றி பிறரை வெறுத்தல்.
4. மஞ்சள் கலந்த வெண்மை – நன்மை-தீமைகளை சீர்த்தூக்கிப் பார்த்தல்,
தயை, பரிவுத் தன்மை, தானம் செய்தல்.
5. மங்கலான வெண்மை – உண்மை, நேர்மை மனத்தினர், தியாக
சிந்தனை, மன்னிக்கும் இயல்பு, குருவை மதித்தல்.
6. தூய வெண்மை – சமநோக்கு உடைமை, விறுப்பு, வெறுப்பு
இன்மை, கோபம் கொள்ளாமை.
[படம்: http://en.wikipedia.org/wiki/Lesya - நன்றி!]
இப்போது சொல்லுங்கள் நீங்கள் எந்த நிறம்? ;-)
இரா.பா,
சென்னை
Thursday, January 20, 2011
எண்ண வண்ணங்கள் (நிறம்)
சிராவகர் அல்லது சாவகர்
சிராவகர் யார்?
சிலப்பதிகாரத்தில் வரும் “சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்” என்ற
வரியில் வரும்
”சாவக” என்ற சொல்லுக்கு பொருள் யாது என்பது தான் இங்கு (மின்தமிழ் குழுமம்)
விவாதிக்கப்பட்டு வருகிறது. சிராவகர் என்ற வடமொழிச் சொல் தமிழிலும்,
பிராகிருதத்திலும் சாவகர் என்று வரும். சாவகர் என்பது சமண
இல்லறத்தார்களைக் குறிக்கும். அதே சமயம், பெளத்த நூல்களில் அந்த
சொல் பெளத்த முனிவர்களைக் குறிக்கப் பயன்படுவதுண்டு. இடத்திற்கேற்றாற்
போல் பொருள் கொள்ளவேண்டும். என்னை? :-)
ஜைன துறவறத்தார் சிரமணர் அல்லது சமணர் என்று அழைக்கப்படுவர்.
(சமணர் என்றால் ஆசிவகரையும் குறிக்கும் என்று சில ‘அறிஞர்கள்”
கூறுவதுண்டு. அது பொருந்தாது. ஆதாரத்துடன் நிறுவ முடியும். பிறகு
ஒரு நாளில் இங்கு எழுதுவேன்) ஜைன இல்லறத்தார் சிராவகர் அல்லது
சாவகர். சமணர் ஏற்பது மகாவிரதம். சிராவகர் ஏற்பது அணுவிரதம்.
விரதம் இருவருக்கும் பெயரளவில் ஒன்றே ஆனாலும் அவற்றின்
“Magnitude” ல் சிறிய வேறுபாடுண்டு.
சாவக தர்மம் மனையறம் என்று அழைக்கப்படுவது போல், சாவகர்களை
இல்லற நோன்பிகள், உலக நோன்பிகள், இல்லற விரதிகள் போன்ற
சொற்களாலும் அழைக்கப்படுகிறார்கள்.
விரதம் அல்லது நோன்பு
சிராவகர்கள் ஒழுகவேண்டிய விரதங்கள் பத்தாம். அவற்றுள் முதல்
ஐந்தும் ”அணுவிரதம்” என்றழைப்படும். இந்த அணுவிரதத்தை
அனைத்து சமண இல்லறத்தார்களும் கடைப்பிடிக்கவேண்டும் என்று
சமணம் சொல்லும்.
1. கொல்லாமை (ஓரறிவு உயிர்கள் விலக்கு)
2. பொய்யாமை
3. கள்ளாமை
4. பிறன்மனை விரும்பாமை
5. மிகுபொருள் விரும்பாமை
(இவைகள் அணுவிரதம் என்றழைக்கப்படும்)
6. ஊன் உண்ணாமை
7. கள் உண்ணாமை
8. தேன் உண்ணாமை
9. இரவு உண்ணாமை
10. குரவரை இகழாமை
இவற்றை திருக்கலம்பகம் என்ற நூல் அழகாகத்
தொகுத்துரைக்கும்.
“விரையார் மலர்மிசை வருவார் திருவறம்
விழைவார், கொலையினை விழையார்; பொய்
உரையார்; களவினை ஒழுகார்; பிறர்மனை
உவவார்; மிகுபொருள் உவவார்; வெம்
கரையால் உணர்வினை அழியார்; அழிதசை
துவ்வார்; விடமென வெவ்வாறும்
புரையார்; நறவினை நுகரார்; இரவுணல்
புகழார்; குரவரை இகழாரே” – திருக்கலம்பகம் (67)
அணுவிரத்தை அருங்கலச் செப்பு என்ற நூல்,
“பெரிய கொலை, பொய், களவொடு, காமம்
பொருளை வரைதலோடு ஐந்து” – அருங்கலச் செப்பு (66)
மேற்சொன்ன விரதங்களை கடைப்பிடிக்கவேண்டியது சாவகரின்
(இல்லறத்தார்) கடமை. எல்லாவற்றையும் கடைப்பிடித்தே ஆக
வேண்டும் என்று சமணம் எப்போதும் வற்புறுத்தியதில்லை.
தாங்கள், தங்கள் சக்திக்கு ஏற்ப முழு மனத்தோடுக்
கடைப்பிடிக்கவேண்டும் என்று தான் சமணம் சொல்கிறது.

Sunday, January 16, 2011
இருவினை சேரா இறைவன் - 2
இருவினை சேரா இறைவன் - 2
அவர்களது உரையாடல் தொடர்கிறது….
(அன்று மாட்டு பொங்கல். மாலை நேரம். அந்த ஆசிரியர் எதோ எழுதிக் கொண்டியிருக்கிறார்)
மாணவன்: ஐயா, பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
ஆசிரியர்: பொங்கல் வாழ்த்துக்கள் தம்பி. பார்த்து நிறைய நாள்கள் ஆகிவிட்டது இல்லையா?
மாணவன்: ஆமாம் ஐயா. அன்றொரு நாள் இருவினைப் பற்றி தாங்கள் கூறியிருந்தீர்கள்? இல்லையா? அந்த கருத்தைப் பற்றி என் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் அதற்கு எதிர்வினையாக சில கேள்விகள் கேட்கிறார்கள்?
ஆசிரியர்: எதிர்வினை இல்லையென்றால் தெளிவுக் கிடைக்காது தம்பி. ஒரு கருத்தை எல்லா தளத்திலிருந்தும் புரிந்துக் கொள்ள அவை உதவும். புரிதல் வசப்படும். ஒவ்வொன்றாக கேள் என்னால் முடிந்தவரை விடைக் காண முயல்கிறேன்!
மாணவன்: ஐயா,
“இருள்சேர் இருவினை சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு”
இந்த குறளுக்கு பரிமேலழகர் உரை இவ்வாறு சொல்கிறது.
“இருள் சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து.
விரிவுரையில்,
இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின், அவிச்சையை “இருள்” என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையார் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே ‘பொருள்சேர் புகழ்’ எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்.
மணக்குடவரும் இக்குறளுக்கு இவ்வாறு பொருள் கூறுகிறார்.
“மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை, தீவினையென்னுமிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிக் சொற்களைப் பொருந்தினர் மாட்டு".
இவ்விரண்டு உரைகளும் ஒரே பொருளை தருவதாக நான் கருதுகிறேன் ஐயா. தாங்கள் விளக்க முடியுமா?
ஆசிரியர்: நன்று தம்பி. எல்லோர் உரையும் படித்திருக்கிறாய் போலியிருக்கிறது. இந்த குறள் என்றில்லை, கடவுள் வாழ்த்தில் உள்ள மற்ற குறளும் எல்லாருக்கும் மயக்கமே தருகிறது.
கடவுள் வாழ்த்தில் உள்ள பத்துக் குறள்களில் கடவுளை நேரடையாக விளிக்கும் சொற்றொடர்களை முதலில்ப் பார்ப்போம்.
1.ஆதிபகவன்
2. வாலறிவன்
3. மலர்மிசை ஏகினான்
4. வேண்டுதல் வேண்டாமை இலான்
5. பொறிவாயில் ஐந்தவித்தான்
6. தனக்குவமை இல்லாதான்
7. அறவாழி அந்தணன்
8. எண்குணத்தான்
மற்ற இரு குறள்களிலும் பொதுவாக இறைவன் என்றேக் கூறப்படுகிறது!
மாணவன்: (குறிக்கிட்டு) ஏன் சொற்றொடர்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்? முழுக் குறளையும் எடுத்துக் கொண்டு ஆராயலாமே, ஐயா?
ஆசிரியர்: பொறுமை தம்பி! முழுக் குறளையும் ஆராய்வோம். நான் சொல்வதைக் கேள். பிறகு உன் கேள்விகளை கேள்? சரியா!
மாணவன்: சரி ஐயா! தாங்கள் தொடருங்கள்.
ஆசிரியர்: எந்த ஒரு நூலாசிரியரும் தான் வழிப்படும் கடவுளைரைத் தான் பாடுவாரேயன்றி, ஒரு பாட்டில் தன் சமயக் கடவுளையும், மற்ற பாட்டுகளில் மற்ற சமயக் கடவுளரை பாடியதாக எங்ஙனமும் அமையவில்லை. அதனால் கடவுள் வாழ்த்தில் கூறப்படுபவர் எந்தக் கடவுள் என்று அந்த சொற்றொடர்களை ஆராய்ந்து, பின் முழுக் குறளையும் பார்க்கலாம்.
அந்தச் சொற்றொடர்களை ஆயும் முன்னர், தமிழ்த் தென்றல். திரு.வி.க அவர்களின் கூற்றை சிறிதுப் படித்துவிட்டு மேற்செல்லலாம். என்னை?
”ஒவ்வொன்றற்கும் புறமும் அகமும் இருத்தல்போலச் சமயத்துக்கும் புறமும் அகமும் இருக்கின்றன. சமயத்தின் புறத்தை நோக்கும்[போது பன்மைக் காட்சியும், அதன் அகத்தை யுணரும்போது ஒருமையுணர்வுந் தோன்றும். புறப் பன்மையைச் சமயவாதிகள் சமயங்கொண்டு கலாம் விளைக்கிறார்கள்”
இங்கே புறம் என்பதை புறச்சான்றுகள் (External Evidences) என்றும் அகம் என்பதை தத்துவம் (Philosophy) என்றும் எடுத்துக் கொள்ளலாம்.புறச் சான்றுகள் என்ற வகையில், எல்லா சமயங்களுக்கும் (பெளத்தம், சைவம், வைணவம்) பொதுமையுண்டு. இதை வைத்து நாம் எல்லோரும் வாதம், பிரதிவாதம் செய்கிறோம். ஆனால் அகத்தை உணரும்போதுதான் சமயங்களின் ஒருமைத் தன்மை வெளித் தெரிகிறது. இந்தியச் சமயங்களில் புறத் தன்மைகள் ஒன்றுபோலவே அமையும். ஆனால், அவற்றின் அகத் தன்மையில் அவைகள் மாறுப்பட்டேயிருக்கும். காட்டாக, வினைக் கொள்கைகள் எல்லா இந்தியச் சமயங்களுக்கும் பொதுவேயாயினும் அவை சமணத்திற்கே உரிய சிறப்புக் கோட்பாடு.
புறத்தன்மையை (External Evidences) எடுத்துக் கொண்டாலும் சமண இலக்கியங்களில்தான் மேற்சொன்ன சொற்றோடர்கள் 3:1 என்ற விகிதத்தில் அவைகள் விரவி வருகின்றன. அவ்வகையில் பார்த்தாலும் அவைகள் சமணம் சார்ந்தேயிருக்கின்றன என்பது அங்ஙகை நெல்லிக் கனி.
அகத்தன்மைக்குள் புகும் முன் தமிழ்த் தென்றல். திரு.வி.க அவர்கள் சொல்வதைப் பார்த்துவிட்டு முன் செல்வோம்.
”திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தில் ஒரிடத்தில் ஒரு திறவு வைத்துள்ளார். அதற்கு அரணாக நூலினுள் பல குறிப்புக்களுண்டு. “பொறிவாயில் ஐந்தவித்தான்:” என்பது அத்திறவு. அத்திறவு கொண்டு கடவுள் வாழ்த்தைத் திறந்து பார்த்தல் வேண்டும்.
பொறிவாயில் ஐந்தவித்தான் என்பது ஒருபோது பொறி வாயில் ஐந்துடையானைக் குறித்தல் வெள்ளிடைமலை. முதலில் பொறி வாயில் ஐந்துடையனாயிருந்து, பின்னை அவ்வைந்தவித்த ஒருவனைத் திருவள்ளுவர் “ஆதிபகவன்” என்று போற்றியிருக்கிறாரென்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்குவ தொன்று. பொறி வாயில் ஐந்துடையனாய்ப் பின்னை அவ்வைந்தவித்த ஒருவனை ஆதிபகவனாகப் போற்றுவது எச்சமயம்?
எங்கும் நீக்கமற நிறைந்து அசைவற்ற ஒன்றை ஜைநம் மறுக்கின்றதில்லை. அவ்வசைவற்ற ஒன்று ஐந்தொழில் புரியா தென்பது ஜைந சித்தாந்தம். “உற்பத்தியு நாசமும் ஒன்றுமில்லாத பரஞ்சுடரே” என்பது ஜைநர் திருநூற்றந்தாதி.
எங்கும் நிறைந்த அசைவற்ற ஒன்றை ஜைநமும் ஏற்கிறது; சைவமும் ஏற்கிறது. ஜைநம் அசைவற்ற ஒன்றிற்கு ஐந்தொழில் கூறுவதில்லை. சைவம் பரம்பொருளுக்கு இருநிலை வகுத்து, ஒன்றற்கு ஐந்தொழிலின்மையும், மற்றதற்குத் தொழிலுண்மையுங் கூறுகிறது. அவ்விருநிலை சொரூபம் தடத்தம் என்பன. பொரூப சிவத்துக்கு ஒன்றுமில்லை. “சிவனரு வுருவுமல்லன் சித்தினோட சித்துமல்லன் – பவமுதற் றெழில்களொன்றும் பண்ணிடுவரனுமல்லன்” (சைவ சாத்திரம்). தடத்த சிவத்துக்கு ஐந்தொழிலுண்டு.
தடத்த சிவத்தைப் “பொறிவாயில் ஐந்தவி ஆதிபகவனாகக் கோடலாகாதோ வெனில், சைவ சாத்திர முறைப்படி கோடலாகா தென்க. பிறவியெடுத்தல், பொறிவாயில் ஐந்து பெறல், பின்னே அவைகளை அவித்தல் முதலியன பசு விலக்கண மெனச் சைவ சாத்திரஞ் சாற்றுகிறது. தடத்த சிவத்தையும் பசு வர்க்கத்தில் சைவ சாத்திரஞ் சேர்த்ததில்லை. ஆதலால் திருவள்ளுவர் வழுத்திய ஆதிபகவனைத் தடத்த சிவமாகக் கோடற்கு மிடமில்லை யென்க. கடவுளியலில் ஜைநமும் சைவமும் பிரியுமிடமிதுவாகும்.”
இவ்வாறு அகத் தன்மையில் பார்த்தாலும் மேற்சொன்ன சொற்றொடர்கள் சமண சமயத்திற்கு இயைந்தேயிருக்கின்றன!. என்னை?
பொறிவாயில் ஐந்தவித்தான் சிவனை, திருமாலைக் குறிக்கும் என்று வாதிட்டு போர்த்துறை நண்ணுவது மடமையாம். என்னை?
கடவுள் வாழ்த்தில் கூறப்பட்டுள்ள சொற்றொடர்கள் மனிதனாகப் பிறந்து, பின்னை இறைவனாக உயர்ந்த ஆன்மாவைக் குறித்தே சொல்கிறதேயன்றி எல்லாம் வல்ல பெரும்பொருளை அவைகள் குறிக்காது.
(ஆசிரியர், தன் பேச்சைச் சிறிது நிறுத்துகிறார்)
மாணவன்: ஆகா, நீண்ட விளக்கத்திற்கு நன்றி ஐயா! தற்போது முழுக்குறளையும் விளக்க வேண்டுகிறேன்?
ஆசிரியர்: இருள்சேர் இருவினையும் சேரா இறைவன், பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு”.
இதில் ஒன்றை நுணுகியாராய்ந்துப் பார்த்தல் நன்றமையும் தம்பி.
குறளாசிரியர் ”இறைவன் புகழ் புரிந்தார் மாட்டு”, அதாவது “இறைவனுடைய கீர்த்தியை விரும்பினவரிடத்து” என இறைவனது கீர்த்தியைச் சொல்லாமல், இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார்” என விதந்துக் கூறுவதினால், இறைவனால் அருளப்பட்ட அறத்தை விரும்பினவரிடத்து (அவர் வழி சென்றவரிடத்து)காதி, அகாதி வினைகளான இருவினையும் சேராது என்பது அக்குறளின் கருத்து.
இவற்றை ஒட்டியே யசோதர காவியம்,
“இருள்புரி வினைகள் சேரா இறைவன் அறத்தை எய்தின்..”
என்றும்,
“இருள்புரி உலகஞ் சேரா வியநெறி பயந்த பெம்மான்
பொருள்புரி விழவு காண்பார் புண்ணிய உலகங் காண்பார்”
என்றும் வருவதைக் காணலாம்.
மாணவன்: அற்புதமான விளக்கம். நேரம் ஆகிவிட்டதால் பிறிதொரு நாளில்
மீண்டும் உரையாடுவோம் ஐயா!
ஆசிரியர்: நன்று தம்பி. அப்படியே ஆகட்டும். சென்று வா!
(மாணவன் விடைபெற்று வீடு திரும்புகிறான்)
தொடரும்…
இரா.பானுகுமார்,

Saturday, November 06, 2010
இருவினை சேரா இறைவன்
இருவினை சேரா இறைவன்!
(தமிழ் ஆசிரியரும், அவரது மாணாக்கரும் உரையாடுவது போல் இக்கட்டுரை அமைகிறது.)
(ஒரு ஞாயிறு காலை நேரம்)
மாணவன்: ஐயா, காலை வணக்கம்!
ஆசிரியர்: காலை வணக்கம். என்ன இவ்வளவு தூரம் தம்பி?
மாணவன்: ஐயா, தங்களிடம் உரையாடலாம் என்று வந்தேன். இன்று விடுமுறையாதலால் தங்களிடம் சில சந்தேகங்களை கேட்டு தெரிந்துக் கொள்ளலாம் நினைத்தேன். தங்களிடம் முன்னேமே சொல்லாமல் வந்ததற்கு மன்னிக்கவும்.
ஆசிரியர்: பரவாயில்லை தம்பி. இன்று எனக்கு முக்கியமான வேலை எதுவுமில்லை. சரி! உன் சந்தேகங்களைக் கேள்?
மாணவன்: திருக்குறள் படித்துக் கொண்டிருந்தேன். கடவுள் வாழ்த்தில் வரும் ”இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்” என்ற சொற்றொடர் எனக்கு விளங்கவில்லை. எல்லாம் வல்ல இறைவனுக்கு வினைகள் எப்படியிருக்க முடியும்? சிவபெருமான், பிறவாயாக்கை பெரியவன் என்று படித்திருக்கிறேன். ஆனால், திருவள்ளுவர் இருவினை சேரா இறைவன் என்கிறார்? நீங்கள் தான் விளக்க வேண்டும் ஐயா?
ஆசிரியர்: தம்பி, அந்த குறளின் பொருள் புரியவேண்டும் என்றால் வினைப் பற்றி நாம் அறிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
மாணவன்: வினையா? தாங்கள் ஊழ்வினையைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்!
ஆசிரியர்: நீ நினைப்பது சரிதான். முதலில் இந்தப் பாட்டைக் கேள்!
“பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் – தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு”1
நாலடி என்ன சொல்கிறது?
ஒரு கன்றுக்குட்டி பல பசுக்கள் உள்ள கூட்டத்தில் தன் தாய் பசுவைத் தேடி எவ்வாறு சென்றறடைகிறதோ அதுபோல ஒருவன் செய்த வினைகள் அவன் பல பிறப்பெடுத்தாலும் அவனை சென்றடையும். வினை செய்தவன் அவ்வினைப் பயனை அனுபவித்தே தீரவேண்டும் என்பது பாடம்.
மாணவன் குறுக்கிட்டு: இதனால் தான், திருவள்ளுவர், “பிறர்க் இன்னா முறபகல் செய்யின் தமக் இன்னா பிற்பகல் தாமே வரும்”2 என்றது இதனால் தானோ?
அப்படி என்றால் நாம் அவ்வினைப் பயனிலிருந்து தப்பிக்க முடியாதா? சம்பந்தர் தன் தேவாரத்தில் “நாளும், கோளும் என்ன செய்யும்” நம்பிரான் இருக்கையிலே”3 என்று சொல்கிறாரே?
ஆசிரியர்: அவசரப்படாதே தம்பி. நான் இன்னும் முடிக்கவில்லை. பிறப்பு என்பது சக்கரம் போன்றது. வினை என்ற மாசு விடுபடும் வரை பிறவிச் சுழற்சி நிற்பதில்லை. நமக்கு நடக்கும் நல்லது, கெட்டது எல்லாம் நம் வினைப் பயன்களேக் காரணம். நமக்கு நடக்கும் நன்மைகளுக்கு நம் நல்வினையும், தீமைகளுக்கு தீவினையும் காரணங்களாக அமைகின்றன. இதனால் நல்வினை, தீயவினை என்ற இரண்டு வினைகள் இருப்பது தெரியவரும். இதனால் தேவர் பெருமான் இருவினை என்றார்.
மாணவன்: ஏதோ தத்துவக் கோட்பாடுபோல் தெரிகிறதே? இது எந்த சமயக் கோட்பாடு? சைவமா? வைணவமா?
ஆசிரியர்: (சிரித்தபடியே) நன்று கேட்டாய் தம்பி. இது வைணவமோ, சைவமோ அல்ல. இது சமணக் கோட்பாடு!
மாணவன்: (ஆச்சரியமாக) சமணமா? மயிலை.சீனி.வேங்கடசாமி, திரு.வி.க போன்றவர்கள் குறள் சமணச் சார்புடையது என்கிறார்களே? இதனால் தானோ?
ஆசிரியர்: இருக்கலாம். ஆனால் நாம் அவர்கள் சொல்வதை இங்கு கருத்தில் கொள்ளவேண்டாம். நாமே விளங்கிக் கொள்ளப் பார்ப்போம்!
மாணவன்: ஆனால், சைவத்திலும் வினைக்கோட்பாடுண்டே?
ஆசிரியர்: பொறு! அவசரப்படாதே! சைவத்திலும் வினைப்பற்றி கூறப்பட்டிருந்தாலும்,சிறப்பாக இது சமணத்திற்கே உரிய கோட்பாடு. சமணம் குன்றியக் காலத்தில் இக்கருத்து சைவத்தில் உள்வாங்கப்பட்டது. தேவாரக் காலத்திற்கு முன் சைவத்தில் வினைக் கோட்பாடு இருந்ததாகச் சான்றுகள் இல்லை. பதின்மூன்றாம் நூற்றாண்டு வாக்கில்தான் சைவ கோட்பாடுகள் தொகுத்து எழுதப்பட்டன.4
மாணவன்: அப்படியா? சைவம் தேவாரக் காலத்திற்கு முன்னர் இல்லையா?
ஆசிரியர்: நான் அப்படி சொல்லவில்லையே! சிவன் வழிபாடு இருந்திருக்கிறது. ஆனால் அவை முழுச் சமயமாக பரிணமிக்கவில்லை. கோட்பாடுகள், ஆகமங்கள், வழிபாடு போன்ற கூறுகள் கொண்ட அமைப்பைத் தான் சமயம் என்று கொள்ள முடியும்! இல்லையா?
மேலும், வினைக்கொள்கையில், சைவத்திற்கும், சமணத்திற்கும் ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. சைவத்தில் சிவபெருமான் தன் ஆணையால் உயிர்களின் வினைப்பயனுக்கு ஏற்ப பிறவி பேதத்தை தருவான் என நம்பப்படுகிறது.5
ஆனால் இதற்கு மாறாக, சமணத்தில் வினைகளை மட்டுறுத்தவென்று யாரும் தேவையில்லை. வினைப்பயன், செய்தவனைத் தானே சென்றடையும். மேலே சொன்ன நாலடியார் பாடல் கூறுவதும் அதுதான். தேவர் பெருமானும் “பிற்பகல் தாமே” என்று கூறுவதால், இங்கே கூறப்படுவதுச் சமண கோட்பாடாகிறது. என்ன புரிகிறதா?
மாணவன்: புரிந்த மாதிரியும் இருக்கிறது. புரியாத மாதிரியும் இருக்கிறது.
((இருவரும் சிரிக்கிறார்கள்)
ஐயா! என்னால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. இருள்சேர் என்று எதனால்?
ஆசிரியர்: நல்வினை, தீவினை பிறப்பிற்கு வித்தாகும். நால்வகை பிறப்புக்கு வழிவகுக்கும். நல்வினைப் பயனால் மனிதப் பிறப்பும், நல்ல குடியும், தேவகதியும், தீவினைப் பயனால் மிருககதியும், நரககதியும் அமையும். பிறப்பறுக்க இந்த இரண்டு வினைகளையும் நீக்க வேண்டும். இவை இரண்டும் பிறப்பிற்கு காரணமாக அமைவதால் தேவர் பெருமான் “இருள்சேர் இருவினை” என்றார்.
”தீவினை, நல்வினை என்று கூறப்படும் இரண்டு வினைகளும் சேராது, மெய்ப் பொருளாய் விளங்கும் இறைவன் புகழை விரும்பிப் போற்றுபவர்களுக்கு.” என்பது அக்குறளின் கருத்து.
மாணவன்: ஐயா, இந்த இடத்தில் ஒரு கேள்வி. இறைவன் புகழைப் போற்றுபவர்களுக்கு இருவினைகளும் சேராது என்றால்? அதா இறைவன் நாமத்தை துதித்து வந்தால் வினைகள் சேராது என்று பொருள் கொள்ளலாமா?
ஆசிரியர்: தம்பி, மேலோட்டமாய்ப் பார்த்தால் அவ்வாறு பொருள் கொள்ளலாம். திருக்குறள் உலகோர் எல்லாருக்கும் பொது. ஒரு சாராருக்கு மட்டும் குறள் எழுதப்படவில்லை. குறளாசிரியர் சமணராகயிருந்தாலும் எல்லாரும் ஏற்றுக் கொள்ளும் வகையில்தான் குறள் யாத்திருக்கிறார்.
“வென்றான் வினையின் தொகையாகி விரிந்து தன்கண்
ஒன்றாய்ப் பரந்த உணர்வின் ஒழியாது முற்றும்
சென்றான் திகழும்சுடர் சூழோளி மூர்த்தி யாகி
நின்றான் அடிக்கீழ் பணிந்தார் வினை நீங்கி நின்றார்”6
”அடிக்கீழ் பணிந்தார் வினை நீங்கி நின்றார்” என்பதனால் இறைவனை வணங்கினாலே வினை நீங்கிவிடும் என்று பொருள் கொள்ளமுடியுமா?
”இறைவன் புகழைப் பாடுகின்றவர்கள், இவ்வாறு எல்லாக் கர்மங்களையும் கெடுத்து, ஆன்மாவின் முழுமையான தூய தன்மையை இறுதியில் அடைகின்றனர். சமண சமயக் கருத்துப்படி இவ்வுலக நன்மைகளைப் பெறுவது இறைவனை வணங்குவோரின் கொள்கையன்று. ஆனால், ஆன்மாவின் இயல்பான தூய்மை நிலையைப் பெற்று, தான் வணங்கும் இறைவனைப் போலவே ஆக வேண்டும் என்பதைத்தான் சமண சமயம் வற்புறுத்துகிறது. சமணம் வற்புறுத்தும் இந்தச் சமய நெறி முறை உலகெங்கும் காணப்படும் சமய கண்ணோட்டங்களில் இருந்து வேறுபாடு உடையதாக இருக்கிறது.
ஒருவன் இறைவன் மூலம் அடையும் நன்மைகளுக்குப் பிரதிபலனாகப் படையல்கள் (காணிக்கைகள்) உருவில் அக்கடவுளுக்கு அளிக்கப்படும் வணக்கத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. மற்ற உலக சமயங்களின் கண்ணோட்டம் (அதாவது, கடவுள் அருளும் வரங்கள் மூலம் ஒருவன் நன்மையைப் பெறுகிறான், அவ்வாறு பெறும் நன்மைக்குப் பிரதி உபகாரமாக (கைம்மாறு) அவன் படையல்கள் மூலம் வணங்குகிறான்)
இறைவனிடம் இருந்து ஒன்றைப் பெற்று, அதற்கு ஈடாக வேறொன்றைக் காணிக்கை மூலம் அவருக்குத் திருப்பித் தரும் வாணிக பேரம் (அறவிலை) போல் தோன்றும் இந்தக் கருத்தைச் சமண சமயம் ஏற்றுக் கொள்ளவில்லை. உண்மையைக் கூற வேண்டுமானால் விலக்க வேண்டிய மூன்று மூட நம்பிக்கைகளில் (தேவ மூடம், பாஷாண்ட மூடம், உலக மூடம்) இதுவும் ஒன்று. இறைவன் என்று வணங்கப்படும் மெய்ப் பொருள், ஒருவர் தம் ஆன்மாவை உயர்த்திக் கொள்ள – தம் பண்பில் மேம்பாடு அடைய வேண்டிய குறிக்கோளாக இருக்க வேண்டுமேயன்றி, வணங்குபவர் (பக்தர்) பேரம் பேசுபவராக இருக்கக் கூடாது. இதுவே சமணரின் கடவுட் கொள்கை; வழிப்பாட்டின் நோக்கம்”7
என்று சமண அறிஞர், பேராசிரியர் ஜெ.ஸ்ரீசந்திரன் கூறுவதை இங்கு எண்ணிப் பார்க்க வேண்டியது அவசியம்.
மாணவன்: ஐயா! தங்கள் விளக்கம் என் மனக் கண்ணை திறந்திருக்கிறது. இறைவன் பற்றிய புரிதல் இன்னும் ஆழமாகிறது. திருப்பதியில் ஏன் அவ்வளவுக் கூட்டம்?
ஆசிரியர்: இது அவர்களின் நம்பிக்கை. இதை நாம் குறைக் கூறுதல் ஆகாது. நம் நம்பிக்கை நம்வரையில் இருக்கவேண்டும்.
மாணவன்: ஐயா, இருவினைப் பற்றி சமண இலக்கியங்களில் இருந்து மேலும் விளக்க முடியுமா?
ஆசிரியர்: குறள் கடவுள் வாழ்த்தில் வரும் சொற்றொடர்களும், கருத்துகளும் மற்ற சமய இலக்கியங்களைவிட சமண இலக்கியங்களில் பெரிதும் பயின்று வருகிறது. அவ்வளவையும் இங்கு கூற ஒரு நாள் போதாது, ஆகையால் சிலவற்றை மற்றும் இங்கு கூறுகிறேன்.
“அருள்புரி மனத்த ராகி யாருயிர்க் கபய
நல்கிப் பொருள்கொலை களவு காமம் பொய்யொடு புறக்கணித்திட்
இருள்புரி வினைகள் சேரா இறைவனது அறத்தை எய்தின்
மருள்செய வருவ துண்டோ வானவ ரின்ப மல்லால்”8
என்றும்,
”ஆதியா யுலகியல்பை யளித்தாய் நீயே
அருந்தவனா யறம்பகர்ந்த அறிவ நீயே
காதியா யுருவினையைக் கடிந்தாய் நீயே
……………”9
என்றும் வருவதைப் பார்க்கலாம்.
மேலும், திருக்கலம்பகம், சிந்தாமணி, பெருங்கதை போன்ற சமண இலக்கியங்களில் இருந்து சான்றுகள் காட்டலாம். விரியும் அதனால் இங்கு சொல்லவில்லை.
மாணவன்: நன்றி ஐயா! அருமையான விளக்கங்கள். சமணப் பற்றி அறிய ஆவல் மேலிடுகிறது. ஐயா, நேரம் போனதே தெரியவில்லை. மற்றொரு நாள் சமணம் பற்றி நீங்கள் விளக்கமாக சொல்லவேண்டும். எனக்கு மட்டுமல்லாமல், நிறைய வலைஞர்களுக்கும் அது மிக உதவியாக இருக்கும்.
ஆசிரியர்: நாம் படிக்கும் காலங்களில்,சைவ, வைணவ நூலகள்தான் பெரிதும் கிடைக்கிறது. சமணர்கள் பார்வை (Jaina View) என்ன என்று தெரியாமல் போய்விடுகிறது. தமிழ்ச் சமணரான திரு.இரா.பானுகுமாரின் வலைப்பதிவு சென்றுப் படித்துப் பார். நிறைய விஷயங்கள் தெரிந்துக் கொள்ளலாம். மற்றொரு நாளில் சந்திப்போம். வணக்கம்!
To be Continued!
--------------------------------------------------------------------------
1. நாலடியார் – 101
2. திருக்குறள் – 319
3. தேவாரம் - சம்பந்தர் –
4. Facets of Saiva Siddhanta – சைவசித்தாந்தம்” ஓர் அறிமுகம் – முனைவர் நல்லூர் சா.சரவணன். (பக்கம்: 1)
5. ,,, (பக்கம்: 25,26)
6. சூளாமணி – 1 – கடவுள் வாழ்த்து
7. திருக்குறள் சமயம் – பக்கம்:31
8. யசோதர காவியம் – 300ஆம் பாட்டு
9. ஜீவசம்போதனை – 27ஆம் பாட்டு

Subscribe to:
Posts (Atom)